Read Time:2 Minute, 18 Second
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- “பூனூல் அறுப்பேன்” என்ற தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,
- மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சகோதரி லாவண்யா – வின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்,
- மோசடி மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்,
- ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்,
- ஈவெரா பெயரில் நடைபெறும் பாலியல் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும்,
- தமிழக ஆளுநரை விமர்சிப்பதோடு பிரிவினையை தூண்டும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- நீட் தேர்வை ஆதரிப்பதோடு,
தமிழக மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், - சிதம்பரம் நடராஜர் கோயிலின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும்,
- PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய வேண்டும்,
- மகா சிவராத்திரி விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில்
நேற்று 27.02.2022 கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி அர்ஜுன் சம்பத் தலைமையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: சுவாமி