0 0
Read Time:2 Minute, 40 Second

கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கும்பகோணம் மகாமக குளம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு ஆதார் பதிவிடுதல், அதில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சேவை நடைபெறும்.

இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைமை தபால் நிலையத்திற்கு 50-க்கும் மேற்பட்டோர் ஆதார் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வந்தனர். ஆனால் ஊழியர்கள் வராத காரணத்தினால் தபால் நிலையம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆதார் சேவையை பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘வாரநாட்களில் தபால் நிலையத்தில் ஆதார் சேவையை பெற ஏராளமானோர் வருவதால் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மேலும் வேறு பணிகள் இருப்பதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆதார் விவரங்களை பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் இங்கு திடீரென முன் அறிவிப்பின்றி ஆதார் சேவை நிறுத்தப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை தருகிறது’ என்றனர்.

தபால் நிலையத்தில் ஆதார் சேவையை தினமும் 150-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. நேற்று ஊழியர்களை நியமிக்க இயலவில்லை.

இருந்தபோதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் ஆதார் சேவை தொடரும். அதற்கென தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %