0 0
Read Time:3 Minute, 59 Second

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன் கூறியுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் சமூக, தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட இன்று முதல் 5ஆம் தேதி வரை ஆறு நாள் அணிவகுப்போம் என தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

போராட்டம்:

இந்நிலையில் இன்று காலை கோயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத்தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடராஜர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வந்தனர். குச்சனூர் சித்தர் பீட ராஜயோக வடகுரு மடாதிபதி அருள்திரு குச்சனூர் கிழார் தலைமையில் வந்த தெய்வத் தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தேவாரம் பாடியவர்கள்:

கைது அவர்களுடன் தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன், வெங்கட்ராமன், குபேரன் உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து அவர்கள் கோயில் எதிரே சாலை ஒரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாத்தியக் கருவியை இசைத்தபடி தேவாரம் பாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.

குண்டு கட்டாக வெளியேற்றம்:

அதில் சிலர் வாகனத்தில் ஏற மறுத்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலை மையமாக வைத்து ஒவ்வொரு அமைப்பினரும் பல்வேறு போராட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க சிதம்பரம் பகுதியில் இன்று கடலூர் மாவட் கூடுதல் எஸ்பி அசோக்குமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %