0 0
Read Time:1 Minute, 9 Second

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டி தினந்தோறும் சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று இரவு சாமி வீதி உலா வந்தது.

இன்று கோமுகி ஆற்றிலிருந்து காட்டேரி வேடமணிந்து வந்த நபர் மேளதாளத்துடன் கோவிலுக்கு வரும் பொழுது குழந்தை இல்லாதவர்கள், நோய்நொடி உள்ளவர்கள் எதிரே பக்தர்கள் முட்டி போட்டு இருப்பார்கள்.

அப்பொழுது காட்டேரி பக்தர்களை முறத்தால் அடிக்கும் விநோத நிகழ்வு நடைபெறும் இதில் குழந்தை வரம் வேண்டியும் உடல்நலம் ஆரோக்கியம் பெறுவதற்கும் பக்தர்கள் அடி வாங்குவது வழக்கம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %