0 0
Read Time:2 Minute, 37 Second

தஞ்சாவூர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், திருஞானசம்பந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னாள் எம்.பி.பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், ரத்தினசாமி, ராம.ராமநாதன், சேகர், கோவிந்தராசு, மாவட்ட துணை செயலாளர் சாவித்திரிகோபால், மகளிரணி செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வினுபாலன், அ.தி.மு.க. நிர்வாகி தவமணி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி வரவேற்றார். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %