0 0
Read Time:3 Minute, 44 Second

நாகப்பட்டினம், கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாகை மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு தற்போது நெற்பயிர் அறுவடை பணிகள் தொடங்கி, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 156 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதால், அங்கேயே நெல்மூட்டைகள் தேங்கி கிடைக்கின்றன. இதனால் நெல் கொள்முதல் பாதிப்பதுடன், திடீரென மழை பெய்தால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளதால், இங்கிருந்து நெல் மூட்டைகளை எடுத்து சென்று பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் எதிரொலியாக கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்குகொண்டு செல்ல மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை, வேதாரண்யம், கீழ்வேளூர், சின்னத்தம்பூர் ஆகிய 3 பகுதிகளில் வேளாண் விற்பனை மையங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் 43 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதை கண்காணிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நேற்று முதல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மூட்டைகளை லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் டன் நெல் எடுத்துச்சென்று சேமிப்பு கிடங்களில் வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை 2 நாளுக்குள் முடிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடன் நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு நாகை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %