தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர்.
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு உறுப்பினர் மா.ரஜினி தலைமையில் சித்தர்காடு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு கழக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கழக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஹாப்பி அர்ஷத் தலைமையில் கழக நிர்வாகிகள் பலர் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் வடகரை, அரங்கக்குடி, இளையாளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழகக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஹாப்பி அர்ஷத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் செம்பனார்கோயில் அடுத்து மேமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கிளைக் கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் அப்பகுதிகளில் திமுக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் சவுந்தரராஜன் உதவி தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
படவிளக்கம் மயிலாடுதுறை சித்தர் காட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு ரஜினி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்த போது.
வடகரை அரங்கக்குடியில் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஹேப்பி அர்சத் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் நோட்டுப்புத்தகம் வழங்கியபோது.
செம்பனார்கோயில் ஒன்றியம் மேம் ஆத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் தட்சணாமூர்த்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய போது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.