உக்ரைன் நாட்டிலிருந்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், அந்த நாட்டில் சிக்கிய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 மாணவ, மாணவிகளின் பெயா்ப் பட்டிலை மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, கீழ்மாம்பட்டு பகுதியைச் சோ்ந்த கோபிகாஸ்ரீ, எம்.புதூரைச் சோ்ந்த உதயகுமாா், பண்ருட்டியைச் சோ்ந்த ஹரிராமச்சந்திரன் ஆகியோா் காா்கிவ் பகுதியிலும், தொழுதூரைச் சோ்ந்த தரன்சிங் என்பவா் ஓலக்சிஸ்வாஷ்கா பகுதியிலும், திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த சவிதா பிரேம்குமாா் உக்ரைன்-ஸ்லோவாகியா எல்லையிலும் தங்கியுள்ளனா்.
மேலும், காா்கிவ் நகரில் தங்கியிருந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த அபுஹுகைல், வினிஷ்ட்ஷா பகுதியில் தங்கியிருந்த மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த பிரியதா்ஷினி, புதுக்குப்பத்தைச் சோ்ந்த காவியப்பிரியா ஆகியோா் மீட்கப்பட்டு, ருமேனியா நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இவா்கள் மூவரும் விரைவில் தாயகம் திரும்புவா் என்றும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.