மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன், கவிதை ஆகியோரின் தம்பதியினருக்கு 23 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்த்திகா இவர் உக்ரைன்ல் ஐந்தாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். அவருடன் சேர்ந்த பல தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்கின்றனர்.
அங்கு தொடர்ந்து போர் நடந்து கொண்டு வருவதால் தங்குமிடம் இன்றி பதுங்கும் குழிகளில் மாணவ மனைவிகள் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு போர் நடந்து கொண்டே இருப்பதால் அங்குள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் அந்த மாணவி அங்கு நடுக்கும் அவலங்களை பற்றி பேசியுள்ளனர். இதனால் அந்த மாணவியின் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கடந்த 26ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
இந்த சூழலில் தற்போது வரை மாணவி ஆர்த்திகவை மீட்க யாரும் முன்வரவில்லை என்பதை மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாணவியின் பெற்றோர் ஆனந்தன், கவிதை ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளிக்க முன்வந்தனர்.
ஆனால் அங்கே இருந்த அதிகாரிகள் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டனர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அந்த தம்பதியினர் வெளியே வந்த அந்த மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேர்ந்தது.
அந்த மாவட்ட ஆட்சியர், உக்ரைனில் சிக்கியுள்ள அந்தப் பெண்ணை பற்றி வாட்ஸ்அப் விடியோ காலிலும் பேசினார்.மேலும் தைரியம் வரக்கூடிய வார்த்தைகள் பேசி ஆறுதலாக வீடியோ காலில் மாணவியிடம் பேசிய மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டு பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.