0 0
Read Time:3 Minute, 29 Second

பள்ளி வாகனங்களை (VAN, MAXI CAB, TOURIST TAXI) உரிய அனுமதியின்றி இயக்கினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.இரா.லலிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, மயிலாடுதுறையில் 01.03.2022 அன்று மாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற மேக்சிகேப் வாகன விபத்தினை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், நடப்பில் உள்ள அனைத்து ஆவணங்;களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய மேற்குறிப்பு பெற்று, அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக இயக்கப்பட வேண்டும்.

சொந்த வாகனத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று, பள்ளி முடிந்தவுடன் தங்களது பொறுப்பில் பாதுகாப்பாக அழைத்து வர கோரப்படுகிறது.

பள்ளி வாகனங்களில் தகுதிச் சான்று புதுப்பிக்க, குழு ஆய்வுக்கு உட்படுத்தி தகுதிச் சான்று பெற்று பின்னர், அரசாணை எண்: 727 (உள்.போ.வ-7) நாள்: 30.09.2012-ன் வழிகாட்டுதலின்படி, அனுமதிக்கப்பட்ட நபரை (நடத்துநர் உரிமம் பெற்றவர்) பள்ளி வாகனங்களில் ஏற்றியும் இறக்கியும் பாதுகாப்பாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட அரசாணைக்கு புறம்பாகவும், அனுமதிச் சீட்டு, காப்புச் சான்று, தகுதிச்சான்று நடப்பில் இல்லாத வாகனங்களில் குழந்தைகளை அபாயகரமாக பள்ளிக்கு அழைத்து சென்று வருவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு இயக்கப்படும் வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, மேல்நடவடிக்கை தொடரப்படும்.

பள்ளி வாகனங்கள் அல்லாத பிற போக்குவரத்து வாகனங்கள் உரிய அனுமதி பெற்று (VAN, MAXI CAB, TOURIST TAXI) அனைத்து ஆவணங்கள் நடப்பில் உள்ளவாறு உரிய மேற்குறிப்பபு பெற்று அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை கொண்ட நபர்களுடன் மட்டுமே பாதுகாப்பாக இயக்க கோரப்படுகிறது. மீறினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இரா.லலிதா,இ.ஆ.ப., தெரிவிக்கிறார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %