0 0
Read Time:2 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள் வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதை தடுக்கவும், மதிப்புக்கூட்டு பொருளாக உற்பத்தி செய்து நிலையான லாபம் பெறும் நோக்கிலும் இந்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமை உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை துணை இயக்குனர் சங்கரநாராயணன் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருட்கள் மற்றும் சணல்பை தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் வேளாண்துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை மற்றும் இயற்கை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %