0 0
Read Time:2 Minute, 15 Second

கடலூரில் கவுன்சிலர்கள் தங்கி இருந்த ஓட்டலில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடலூர்: தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 இடங்களில் 33 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தி.மு.க சார்பில் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது அதிருப்தி தெரிவித்த ஐயப்பன் எம்.எல்.ஏ தனக்கு ஆதரவான 20 கவுன்சிலர்களை புதுச்சேரியில் உள்ள பல்வேறு தங்கும் விடுதியில் தங்கவைத்து உள்ளார். பின்னர் அவர்கள் அனைவரையும் கோட்டகுப்பம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு இடம்மாற்றி உள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெறும் மேயர் தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் 20 கவுன்சிலர்கள் மாயமான சம்பம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு போலீசார் வந்துள்ளனர். மேலும் காலையில் வாக்களிக்க சென்ற கவுன்சிலர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகின்றது.

நாங்கள் தங்கி உள்ள ஓட்டலை சுற்றி 300-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் வாக்களிக்க சென்றபோது அவர்கள் எங்களை தடுத்து நிறுத்ததனர். பின்பக்க வாசலிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் எங்களால் இங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று தெரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %