0 0
Read Time:3 Minute, 39 Second

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கழிவு நீரை மறு சுழற்சி செய்ய வேண்டும்.

மோகன்தாஸ்:- கிடாரங்கொண்டான் ஊராட்சியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

சாந்தி:- ஆக்கூர் முக்கூட்டு, பஞ்சாக்கை, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கூர் மஞ்சளாறு பகுதியில் ஈமகிரியை மண்டபம் மற்றும் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

முத்துலட்சுமி:- பொதுமக்களின் கோரிக்கையான ஆறுபாதி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து, மன்னம்பந்தலில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை மறு சுழற்சி செய்ய வேண்டும்.

சக்கரபாணி:- கருவாழக்கரை, ஆலவேலி, சேமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும். செம்பனார்கோவில் – மேலப்பாதி செல்லும், சாலையில் குடியிருப்பு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

கருவாழக்கரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ-சேவை மையத்தை திறக்க வேண்டும்.

கிருஷ்ணன்:- வல்லம் – மகாராஜபுரம் இடையே உள்ள கப்பி சாலையை சீரமைக்க வேண்டும். பரசலூரில் பிரதமர் வீடு கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

ஜெயந்தி:- திருவிடைக்கழி ஊராட்சி பூச்சாத்தனூர் கிராமத்தில் தில்லையாடி மற்றும் எடுத்துக்கட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் வகையில் இரண்டு பாலங்களை கட்டித்தர வேண்டும்.

ராஜேஸ்வரி:- சின்னங்குடியில் உள்ள பழைய அங்காடி கட்டிடத்தையும், சிமெண்டு சாலைகளையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர்:- ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா, ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %