0 0
Read Time:1 Minute, 31 Second

வானகிரி மீனவர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவெண்காடு: பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். 50 விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு வானகிரி மீனவர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைத்திட தமிழக அரசு ரூ.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மீன்பிடி இறங்குதளம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மீனவ கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது சீர்காழி தாசில்தார் சண்முகம், உதவி பொறியாளர் அன்னபூரணி, மீன்வளத்துறை துணை இயக்குனர் சண்முகம், மீனவர் கிராம தலைவர் வெற்றிச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %