குத்தாலத்தில் ருத்ராபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
குத்தாலம் தோப்புத்தெருவில் பழமை வாய்ந்த ருத்ராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு கடந்த 4-ந் தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின.
தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, நேற்று மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடத்தை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் மேள தாளங்கள் முழங்க ருத்ராபதீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலவர் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தோப்புத்தெரு கிராம மக்கள் செய்திருந்தனர்.