0 0
Read Time:1 Minute, 43 Second

பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டபேரவை தேர்தலின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தகுதியானவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு தணிக்கை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களின் விவரங்களை தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நகர கூட்டுறவு மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும், இரண்டாம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நகைக்கடன் தணிக்கை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %