சிதம்பரம், மார்ச் 9: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் வழி பட உரிமை கோரும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை யில் தங்களது கருத்தையும் கேட்டறிய வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நகர அமைப்பாளர் ஆ.குபேரன் சிதம்பரம் கோட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரி டம் அளித்த கடிதம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம் பல மேடையில் ஏறி பக்தர்களும், சிவனடியார்களும் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட்டு வந்த உரிமையை தில்லைக் கோயில் தீட்சிதர்கள் தடை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. இது இந்து மதத்தினரின் வழிபாட்டு உரிமையை பாதிப்பதாகும். இந்தப் பிரச்னை குறித்து தீட்சி தர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கா மல், பொதுமக்கள் தரப்பில் தெய்வத் தமிழ்ப் பேரவையினரின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இந்தப் பிரச்னையில் எங்களது கோரிக்கைகளை கேட்காமல் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்று அதில் தெரிவித்தார்.
நிருபர்:பாலாஜி