கடந்த மூன்று நாட்களாக அரசு டவுன் பேருந்து வராததால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு.
பண்ருட்டியில் இருந்து ஆயிப்பேட்டை வழியாக 21-எண் கொண்ட அரசு டவுன் பஸ் குறிஞ்சிப்பாடிக்கு சரியான முறையில் இயங்காததாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பேருந்து வராமல் இருந்தாலும் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் வந்து படிக்கும் மாணவர்கள் சில நாட்களாக வர முடியாமல் தவித்து வருகின்றனர் சில நேரங்களில் அரசு டவுன் பஸ் காலையில் இயக்குவது மாலையில் இயக்குவதில்லை சில தினம் மாலையில் இயக்குவது காலையில் இயக்குவதில்லை என தெரிவித்துள்ளனர்.
அப்படியே தொடர்ந்து இயக்கினாலும் சரியான நேரத்திற்கு பேருந்து இயக்குவது இல்லை ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் இரன்டு வருடங்களாக சரியான முறையில் இயங்கவில்லை எனவும்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பள்ளிகள் கல்லூரிகள் திறந்து உள்ளன. மிகவும் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து படிக்கும் நிலையில் பேருந்துகள் இயக்குவது தடையாக இருப்பதால் பள்ளிக்கு சரியான முறையில் வந்து படிக்க முடியவில்லை என மாணவ மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த ஒரு டவுன் பஸ்சை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் அந்த வழியாக 21-தடம் எண் கொண்ட பேருந்தை காத்திருந்து பார்த்து வராததால் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து தனியார் பேருந்தை பிடித்து அந்நேரத்தில் ஏறும் பொழுது அளவுக்கு அதிகமான மாணவர்கள் பேருந்து ஏறும் போது கூட்டநெரிசல் ஏற்பட்டு படியில் தொங்கி வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் சில மாணவர்கள் அரசுப் பேருந்தை நம்பி கையில் பணம் எடுத்துவராமல் போவதால் பயணச்சீட்டு எடுக்க முடியாமல் தனியார் பேருந்தில் ஏறி பள்ளிக்கு வர முடியாமல் சில மாணவர்கள் வீட்டிற்கு திரும்புகன்ற நிலை ஏற்படுகிறது ஆகவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் மாணவ மாணவியரின் நலன் கருதி உடனடியாக தலையிட்டு தினசரி 21-தடம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் பள்ளி நேரங்களில் சரியான நேரத்திலும் தினசரி இருவேலைகளும் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபர்:முரளிதரன்