0 0
Read Time:2 Minute, 18 Second

அய்யம்பேட்டை: அகரமாங்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்கக்கோரி அய்யம்பேட்டையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையிலிருந்து, அய்யம்பேட்டை வழியாக அகரமாங்குடி கிராமத்திற்கு இரண்டு அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றில் அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, வேம்பக்குடி, செருமாக்கநல்லூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக அகரமாங்குடிக்கு இயக்கப்பட்டு வந்த ஒரு அரசு டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மாலை கிராம மக்கள், மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற சாலை மறியலில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி கனகராஜ், அம்பிகா அன்பழகன், சத்திய வாணி சீரங்கன், ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதி கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் மற்றும் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இன்று போக்குவரத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறினர்.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %