0 0
Read Time:2 Minute, 44 Second

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

மயிலாடுதுறை நகரில் காமராஜர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய 2 பஸ் நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் பிரதான சாலையான நகர பூங்கா சாலை பகுதியில் நேற்று தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது.

இதனால் புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வர வேண்டிய பஸ்கள் நேற்று சின்னக்கடைவீதி நகராட்சி அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டன. திருவாரூர் மற்றும் தரங்கம்பாடி மார்க்கங்களில் செல்லும் அனைத்து பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன.

அரசு போக்குவரத்துக்கழக விசாரணை அலுவலகமும் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அதேசமயம் சென்னை, கும்பகோணம், சிதம்பரம், பூம்புகார் உள்ளிட்ட மார்க்கங்களில் இருந்து வந்த பயணிகள் பிரதான பஸ் நிலையமான காமராஜர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திருவாரூர், தரங்கம்பாடி மார்க்கங்களில் செல்லும் பஸ்களில் ஏறுவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில பயணிகள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணங்களை செலுத்தி தற்காலிகமாக செயல்பட்ட பஸ் நிலைய பகுதிக்கு வந்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென புதிய பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழகத்தினர் கூறுகையில், ‘சாலை பணிக்காக இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் பஸ்கள் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி நாளை (இன்று) அனைத்து பஸ்களும் வழக்கம்போல் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும்’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %