0 0
Read Time:4 Minute, 31 Second

தஞ்சை நாகை சாலையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவில் அரண்மனை சரஸ்வதி மஹால் நூலகம், சுவாமிமலை தாராசுரம் கும்பகோணம் மகாமக குளம் பல்வேறு கோவில்கள் மனோரா கல்லணை போன்றவை சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும். 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன குறிப்பாக தஞ்சையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் பெயரில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

இதுதவிர ரூ.75 லட்சம் செலவில் தஞ்சை நாகை சாலையில் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூங்கா வுடன் கோபுரம் அமைக்கப்பட்டது இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் சறுக்கி விளையாடுவதற்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வருவார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து வழிபாட்டுத்தலங்கள் விளையாட்டு மைதானம் பொழுதுபோக்கு பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி அனைத்து தளர்வுகளையும் நீக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தஞ்சையில் மணிமண்டபம் சினிமா தியேட்டர்கள் போன்றவை நூறு சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது. ஆனால் தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மட்டும் இன்றுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. பூங்கா வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பேப்பர் கப் மதுபாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கிறது. பூட்டி இருப்பதை பயன்படுத்தி சிலர் ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு செல்கின்றனர்.

தொடக்கத்தில் இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவிற்கு செல்வதற்கு கட்டணம் எதுவும் இல்லாமல் இருந்தது. அதன்பின்பு நுழைவுச்சீட்டு பெரியவர்களுக்கு ரூபாய் 5 வசூலிக்கப்பட்டது. சிறுவர் சிறுமியர்களுக்கு கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டது.

சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மட்டும் இன்றுவரை திறக்கப்படவில்லை எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் திறப்பதற்கு சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %