0 0
Read Time:1 Minute, 43 Second

நன்னிலம்: பேரளம் அருகே கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்த இழுத்தனர்.

பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இந்த கோவிலில் தேர் மிகவும் சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிதாக தேர் செய்யப்பட்டு பணி நிறைவடைந்து கடந்த 6-ந்் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது.

கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணி அளவில் கிருபாசமுத்திர பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர் கோவிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து, பிற்பகல் 2.30 மணி அளவில் தேர் நிலையத்தை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தன்ராஜ், ஆய்வாளர் ராஜ்திலக், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %