0 0
Read Time:3 Minute, 11 Second

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி முன்னிட்டு நகராட்சி சார்பில் 265 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாயொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆழித்தேரோட்டம் நடக்கிறது. தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமையில், நகராட்சி ஆணையர் பிரபாகரன் மேற்பார்வையில் தேரோடும் 4 வீதிகளிலும் ஆக்கிமிரப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. சாலைகளில் உள்ள மணல் திட்டுகள் பொக்லின் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.

சாலையின் இருபுறங்களிலும் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் கொண்டு நகரை தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தற்காலிக கழிப்பறைகள் தேவையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் கூறுகையில், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவில் பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக திருவாரூர் நகராட்சியில் 165 துப்பரவு பணியாளர்கள் மற்றும் மன்னார்குடி, பட்டுகோட்டை, மயிலாடுதுறை, நாகை, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளில் இருந்து 100 துப்பரவு பணியாளர்கள் என 265 பணியாளர்களை கொண்டு நகர் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசியும் தெளிக்கப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாக நடத்திட நகராட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %