0 0
Read Time:1 Minute, 20 Second

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது.

நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் ஆழித்தேரை நேரில் பார்வையிட்டனர். பின்னர் கோவிலில் இருந்து அஜபா நடனத்துடன் தியாகராஜர் புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார்.

அப்போது பக்தர்கள் ஆருரா, தியாகேசா என பக்தி கோஷங்களை எழுப்பினர். இதே போல விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் புறப்பட்டு தேர்களில் எழுந்தருளினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %