0 0
Read Time:2 Minute, 6 Second

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப் பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 20 வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் தனியார் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சாஷா என அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உயிரிழந்துள்ளனர்.

போர் செய்தி சேகரிப்புகாக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களது வாகனம் போர் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது, இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ர நிரூபர் உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

முன்னதாக ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரெண்ட் ரெனாட் கடந்த ஞாயிறு அன்று ரஷ்ய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இதன் இடையில் இதுவரை நடந்து வரும் போரில் குழந்தைகள் மட்டுமே 97 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

மேலும் உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் இருபது ஆயிரம் பேர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %