மாவட்ட வள மையம் ஊராட்சிகள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்த ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வளமையத்தில் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட வள மையம் ஊராட்சிகள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் அரசு திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைப்பு குறித்த பயிற்சி வகுப்பு 683 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 98 பிரதிநிதிகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் ஒருங் கிணைப்பு பயிற்சி நடைபெறுகிறது.
கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு அரசு திட்டங்கள் சென்றடைவதில் சமுதாய அமைப்புகள் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமுதாய அளவிலான அமைப்புகள் இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் ஊராட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், உற்பத்தியாளர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர், சமுதாய வள பயிற்றுனர், உற்பத்தியாளர்கள் குழு தலைவர் ஆகியோர் ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் குறித்த ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் பெண் குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் பாதுகாக்கும் சட்டங்கள், பள்ளி செல்லா குழந்தைகளை இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வழிகாட்ட வேண்டும். கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றவும் ஊராட்சி பிரதிநிதிகள், சமுதாய அமைப்பினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
பயிற்சியில் மாவட்ட வள மைய பயிற்சி அலுவலர் கதிர்வேல், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா, சித்ரா, பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் மற்றும் மாவட்ட பயிற்றுனர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.