0 0
Read Time:2 Minute, 25 Second

மன்னார்குடி: அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 35-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளிக்க நேற்று வந்தனர். அங்கு மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் இல்லாததால் அவரது உதவியாளர் ரவி என்பவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் இயங்கி வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் சேர்த்து 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் இருக்கை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு வாரம் 1 நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. 3,4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.

இதனால் குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய இருக்கைகள் மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %