திட்டக்குடி, மார்ச்.18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் திட்டக்குடி, மங்களூர், வேப்பூர், தொழுதூர், பெண்ணாடம், ஆவினங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் செல்போன் உதிரிபாக தனியார் நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட 100 பெண்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன் 35 தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதன் மூலம் 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இது போன்ற முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதில் தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனர் ஜெயசீலன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராஜராவ், மங்களூர் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகராட்சி துணை தலைவரும், நகர செயலாளருமான பரமகுரு, நகராட்சி தலைவர் வெண்ணிலா கோதண்டம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சுரேஷ், இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், தொகுதி சமூக வலைதள அமைப்பாளர் விக்னேஷ், நகர்மன்றஉறுப்பினர்கள் உமாமகேஸ்வரி சங்கர், கவிதா வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டர்.
தொடர்ந்து ஆவினங்குடியில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி ஆசிரியர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.