Read Time:1 Minute, 6 Second
மானிய டீசல் விலை உயர்வால் 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவி்ல்லை.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மானிய விலை டீசல் ஒரு லிட்டர் ரூ.103-க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீடீரென ஒரு லிட்டர் டீசல் ரூ.120 என அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 5 ஆயிரம் மீனவர்களும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல நேற்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.