சென்னை, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு. அந்த நிதியில் ரூ.100 கோடி தமிழகத்தில் உள்ள புராதான கோவில்களை சீரமக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 சிறப்பு நிதி ஒதுக்கீடு
*வட்டியில்லா பயிர் கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
*கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிதாக தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்
*சிங்காரச்சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
*சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழிலில் உருவாக்க மையம் அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு
*தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க ரூ.1,000 கோடி.