0
0
Read Time:1 Minute, 18 Second
திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான முள்ளாட்சி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் விழா நடத்த முடியாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மன் வீதிஉலா காட்சியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.