சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். சக்தி கணேசனை சந்தித்து மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல ஆண்டுகளாக
சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம்.
ஆனால் காணிக்கை பெறுவதில் தீட்சிதர்களுக்குள் ஏற்படும் பொறாமை சண்டையின் காரணத்தால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பொய்யான காரணங்களை கூறி சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட செல்கின்ற பக்தர்களை ஒரு சில தீட்சிதர்கள் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி கீழே பிடித்து தள்ளுகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நடராஜர் கோவில் நடைபெற்ற தரிசனத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதை அனைவரும் அறிவார்கள் அப்போது தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்று தெரியவில்லையா?
கடந்த பிப்ரவரி மாதம் 13 -ஆம் தேதி சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடச் சென்ற ஜெயஷுலா என்ற பெண்ணை அங்கிருந்த தீட்சதர்கள் அடித்து கீழே தள்ளியுள்ளனர் இதுகுறித்து ஜெயஷுலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்ற உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோவில் என இரண்டு கோவில்களிலும் நடைபெறுவது வழக்கம் ஒருவனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்று நடைபெற்ற சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு தமிழக அரசும் ,கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது எனவே இந்த ஆண்டு பக்தர்களுடன் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் திருச்செந்தூர் பழனி முருகன் கோவில் உட்பட பல்வேறு பல்வேறு கோவில்களில் பல லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து வருவதை யொட்டி மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை ) பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும் ..
மேலும்வருகிற 26-ஆம் தேதி அன்று கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர்கள் ஜெமினி எம்.என். ராதா நகர்மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கின் மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் ஆர். சம்பந்தமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ. துறை மாநில பொதுச் செயலாளரும் கடலூர் மாவட்ட தலைவருமான பி. ஸ்டிபன் முத்துப்பாண்டி மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆர்.வி சின்ராஜ் ஆறுமுகம் ஆர்.டி.ஐ. துறைஒருங்கிணைப்பாளர் பி.ஜெயச்சந்திரன் ஆர்.டி.ஐ. துறை துணைத் தலைவர் எஸ்.செந்தில்குமார் பொதுச்செயலாளர்கள் ஏ .ராஜசேகர் ரகுநாதன் ஆகியோருக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) சாமி தரிசனம் செய்ய அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனு வழங்கிய போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ.துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஸ்டிபன் முத்துப்பாண்டி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி பி.செல்வக்குமார் ஆர்.டி.ஐ.துறை மாவட்ட துணை தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.