பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது தினசரி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பும் அவல நிலை. உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா??? என பி[பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து விழப்பள்ளம் வரையிலும் சைக்கிள் ஸ்டேன்ட் பின்புறம் உள்ள நடைபாதைகளிலும் பல மாதங்களாக சாக்கடை கால்வாயில் மேலே மூடப்பட்ட டைல்ஸ்கள் உடைந்து ஒரு ஆள் உள்ளே விழும் அளவிற்கு குழி ஏற்பட்டுள்ளதால் நடைபாதையின் வழியாக பள்ளி மாணவர் முதல் பொதுமக்கள் வரை நடந்து செல்லும் போது கவனக் குறைவு ஏற்பட்டு இந்த சாக்கடை மேல் ஏற்ப்பட்டுள்ள குழியில் சிக்கி தினசரி சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பி வருகின்றனர்.
மேலும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடை பாதையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி டைல்ஸ் ஒட்ட வேண்டியும் சிமென்ட்சிலாப் புகளை அமைத்து மூட வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் பேருந்து ஏற வரும் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது உயிர் பலிவாங்கிய உடன் தான் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்