மயிலாடுதுறை அடுத்து திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அறிவித்து இருந்த பொது நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் 724 நபர்களுக்கு நகை மற்றும் தள்ளுபடி ஆணை வழங்கி துவக்கினார்.
தரங்கம்பாடி, மார்ச்-23;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடி தமிழகமெங்கும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கம் வழங்கி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின் பேரில் திருக்களாச்சேரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கியில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நகை மற்றும் தள்ளு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, தில்லையாடி, காட்டுச்சேரி, ஆத்துப்பக்கம், சந்திரபாடி உள்ளிட்ட 6 கிராம மக்கள் 724 நபர்கள் வைத்திருந்த நகைக்கடன் 2 கோடியே 9 லட்சத்து 32 ஆயிரத்து 360 ரூபாய்க்கு வைத்திருந்த நகை கடன் தள்ளுபடி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் சம்சாத் ரபிக், பைலட், சாமிநாதன், ரங்கராஜன், ஒன்றிய திமுக அவைத் தலைவர் மனோகரன் ஆகியோரின் முன்னிலையில் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சேகர், முதுநிலை எழுத்தர் விஜயபாஸ்கர், எழுத்தர் பிரசன்னா, முன்னாள் செயலாளர் கருணாநிதி, விற்பனையாளர் காயத்ரி, நகை மதிப்பீட்டாளர் சுகுமார் ஆகியோர் 724 நபர்களுக்கு நகை மற்றும் தள்ளுபடி ஆணை வழங்கினர். மேலும் இதில் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பயனடைந்த 724 நபர்களும் தமிழ்நாடு முதல்வருக்கும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.