சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா ஆகியோர் முன்னணி வகித்தனர். நகர செயலாளர் பி.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விஸ்வகர்மா விருது பெறுபவர்களை வாழ்த்தி பேசி விஸ்வகர்மா விருதை வி.இராஜசேகரன் (மாவட்ட நீதிபதி (ஓய்வு ) வழங்கி சிறப்பித்தார் முனைவர் வை.சிதம்பரநாதன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் வேதியியல் பிரிவு துறைத்தலைவர் (ஓய்வு) அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் எம்.கோவிந்தராஜன் பொதுவியல் துறைத்தலைவர் (ஓய்வு) முத்தையா தொழில்நுட்ப கல்லூரி அண்ணாமலை நகர் பேராசிரியர் ம.நடராஜன் வேதியியல் துறை தலைவர் (ஓய்வு) பூம்புகார் கல்லூரி ஆகியோருக்கு விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.மாநில தலைவர் ஜி.சேகர் விருது பெற்றவர்களின் சிறப்பு குறித்து வாழ்த்தி பேசினார்.
தி.மு.கழக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, தமிழக அரசின் திருக்கோயில்களில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அறங்காவலர் பொறுப்பு வழங்குவது சிதம்பரத்தில் கவரிங் தொழிற்பேட்டை அமைப்பது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தர மாண்புமிகு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ் தொழிற்சங்க செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் கைவினைஞர்கள் சங்க நகரதலைவர் எஸ்.என்.ராமு செயலாளர் என்.பிரபாகரன் சில.சந்திரகுப்த்தன் எம்.பாலசுப்பிரமணியன் எஸ்.சுரேஷ் ஆர்.மாரியப்பன் ஆர்.தில்லைநடராஜன் எல்.கலியமூர்த்தி கு.நடராஜன் எம்.நாகராஜன் ஏ.சந்திரமௌலி க.சண்முகம் ஆர்.உமாபதி பி.சிவக்குமார் ஜி.முருகன் கே.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவில் நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிருபர்:பாலாஜி