0 0
Read Time:2 Minute, 6 Second

கடலூர் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருபவர் சந்திரா (55). இவரது தாத்தா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய பூமி மூன்றரை ஏக்கர் நிலத்தை, இவரின் சித்தப்பா குழந்தை வேலு என்பவருக்கு கடந்த 1999ஆம் ஆண்டு கிருஷ்ணன் உயில் எழுதி வைத்ததாக இவரது தந்தை பாட்டப்பன் மற்றும் சித்தப்பா குழந்தைவேலு ஆகியோர் பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு இவரது சித்தப்பா குழந்தை வேலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திராவின் தகப்பனார் பாட்டப்பனுக்கு ஆதரவாக நீதி வழங்க வேண்டும் என கோரி சந்திரா பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் பலமுறை விண்ணப்பம் தாக்கல் செய்தார். இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அலுவலர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ள அறிவுறுத்தினர்

ஆனால் தொடர்ந்து மனு கொடுத்து வந்ததும் பணியில் இருந்த ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த மிரட்டல் விடுத்து ஒருமையில் திட்டியதாக தெரிகிறது.

இதனால் இவர் மீது பவானி உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் சாந்தி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பவானி போலீசார் சந்திரா வை கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %