0 0
Read Time:2 Minute, 42 Second

விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்க்கெட் கடை வாடகையை 6 மடங்கு உயர்த்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கடை வாடகை செலுத்த முடியாமல் வியாபாரிகள் தவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் தீர்ப்பு வரும் வரை நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த 6 மடங்கில் 2 மடங்கு வாடகையை வியாபாரிகள் உடனடியாக செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் வாடகை வசூலிக்க சென்றபோது, வியாபாரிகள் சிலர் வாடகையை சரியாக செலுத்தாமல் ரூ.2 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நகராட்சி ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

அப்போது அங்கிருந்த வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாடகை பாக்கியை செலுத்த தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இது குறித்த தகவல் அறிந்த நகராட்சி தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் சம்பவ இடத்துக்கு சென்று வியாபாரிகளை சமாதானப்படுத்தினார்.

அப்போது நகராட்சி நிர்வாகத்தை சிறப்பாக நடத்த வாடகை பாக்கியை முறையாக செலுத்துமாறு வியாபாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். அதனை ஏற்று வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கியை கட்டுவதாக கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கடைகளுக்கு சீல் வைக்காமல் அதிகாரிகளும் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %