0 0
Read Time:1 Minute, 15 Second

விருத்தாசலத்தில் மாத சீட்டு நடத்தி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் குஞ்சிதபாதம் மனைவி செல்வரத்தினம் (வயது 65). இவர் அதேபகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோரிடம் மாத சீட்டு போட்டதுடன், ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கட்டியிருந்தார்.

அதன்பிறகு செல்வரத்தினம் தான் கட்டிய சீட்டு பணத்தை ராஜசேகர், மீனாவிடம் கேட்டு வந்தார். ஆனால் கணவன்-மனைவி இருவரும் கட்டிய சீட்டு பணத்தை தராமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் ராஜசேகர், மீனா ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %