0 0
Read Time:4 Minute, 57 Second

உக்ரைன் மீது ரஷ்யா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர்.

12.45: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

11.55: உக்ரைனுக்கு எதிரான போரில் செலவிட ரஷ்ய பட்ஜெட்டில் நிதி இல்லை என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ரஷிய அரசு தங்கள் ராணுவத்திற்கு உறுதியளித்தபடி நிதியளிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக, அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

10.25: மரியுபோல் நகரில் 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கில் ரஷியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 300 பேர் இறந்ததாக, நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

09.40: உக்ரைனில் தனது ராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷியா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 54 ரெயில்வே ஊழியர்கள் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் மூவர் ரஷியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

08.20: உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகளை குறி வைத்து ரஷிய படைகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதாக அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்தபட்சம் 34 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

06.20: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ரஷ்யாவிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

04.30: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 184 பேர் காயமுற்றனர் எனவும், இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.

03.00: ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் நாட்டினருக்காக போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் பிஷப்புகள், தூதர்கள், பக்தர்கள் என 3,500 பேர் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

01.15: உக்ரைனுடனான போரில் இதுவரை 1,351 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,800-க்கும் அதிகமான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

00.05: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று போலந்து சென்றடைந்தார். உக்ரைன் எல்லை அருகிலுள்ள ராணுவ முகாமுக்குச் சென்ற அவர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜோ பைடனின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %