0
0
Read Time:1 Minute, 15 Second
திருவெண்காடு, அருகே நாங்கூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி பெருமாள் அதிகாலை பக்தர்களால் தேருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து தேர் 4 வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.
அப்போது பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் ஆதீனகர்த்தர்கள் ரங்கநாதன், கிருஷ்ணமாச்சாரி, கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.