0 0
Read Time:1 Minute, 48 Second

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சீர்காழி கிளை தலைவர் எருக்கூர் தாஸ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஜெயவாணன், வெங்கடேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி கோவிந்தராஜன் வரவேற்றார். இதில் சங்க நிர்வாகி சித்திரை இளங்கோவன் உள்பட சங்க நிர்வாகிகள், அஞ்சலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சல் துறையை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. டார்கெட் என்ற பெயரில் அஞ்சலக பணியாளர்களை சிரமப்படுத்தக்கூடாது.

கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் காரணமாக அஞ்சலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று பணிக்கு வராததால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %