0 0
Read Time:2 Minute, 31 Second

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதன் முறையாக மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) நடந்தது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மாநகராட்சியின் முதல் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 48 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள தாராசுரம் வார்டு பகுதிகளில் புதிய வசதிகளை ஏற்படுத்துதல், மாநகராட்சி குத்தகை ஒப்பந்தங்களை வரையரைப்படுத்துதல் உள்ளிட்ட 12 வகையான பொருட்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ரூ.25.32 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆதிலட்சுமி, காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இவர்களின் கேள்விகளுக்கு தி.மு.க. உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி பதிலளித்து பேசினார்.

இவர்களுக்கு இடையேயான காரசாரமான விவாதத்தால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. முடிவில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் அறிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %