0 0
Read Time:4 Minute, 19 Second

மயிலாடுதுறையில், வனத்துறை பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம், சீரகாழி தாலுக்கா, வேட்டங்குடி ஊராட்சி கூழையாரில், வனத்துறை சார்பாக பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 2200 (Olive Ridley) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தாதவது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வேட்டங்குடி கிராமம், கூழையாரில் வனத்துறையின் ஆமை முட்டை பொறிப்பகம் பராமரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அழிந்து வரும் இனமான Olive Ridley எனும் கடல் ஆமைகள் பல ஆயிரம் மைல்களை கடந்து, வங்காள விரிகுடா கடற்பகுதி கரையோரங்களில் இரவு நேரங்களில் முட்டையிட்டு செல்லும், இந்த முட்டைகளை, நாய்கள், நறிகள் மற்றும் மனிதர்களால் இதன் இனப்பெருக்கத்திற்கு அச்சுருத்தல் உள்ளது. வனத்துறையின் வாயிலாக கடல் ஆமை முட்டைகள் இரவு நேரங்களில் சேகரிக்கப்பட்டு, ஆமை முட்டை பொறிப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதாங்களில் சீர்காழி வனச்சரகத்தில் ஆமை முட்டை பொறிப்பகத்தில் (Hatchery) 32000. முட்டைகள் சேகரிக்கப்பட்டு 15572 ஆமை குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த கடலில் விடப்படும் சுமார் 2200 (Olive Ridley) ஆமை குஞ்சுகளை கூழையாறு கடல் பகுதியில் விட்டு அழிந்துவரும் கடல் ஆமைகளை பாதுகாப்பதற்கு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலில் விடப்பட்டது. இந்த, கடலில் விடப்படும் ஆமைகள் எட்டு வருடங்கள் கழித்து இதே கடற்கரை பகுதிக்கு இனப்பெருக்கத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் முதல் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது. இது கடலின் அடியில் காணப்படும் தேவையில்லாத பாசி இனங்களை தின்று, மீன்களின் பொருக்கத்திற்கு வழிசெய்கிறது. இதன் இனப்பெருக்க காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மாதங்களில் கடற்கரையில் இருந்து 5 கீமீ தொலைவிற்குள் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டிருந்தும். மீனவர்கள் இயந்திர படகுகளின் முன் பக்க ரக்கையில் மாட்டி அதிகளவில் ஆமைகள் அடிபட்டு இறந்து கடற்கரையில் ஒதுங்குகின்றன. கடல் ஆமைகள் மீனவர்களின் நண்பன் என்பதால் இதனை பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சீரகாழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், வன பாதுகாவலர் ஜோசப் டெனியல், சீரகாழி வருவாய் கோட்டாட்சியர நாராயணன், உதவி இயக்குநர் (மீன்வளம்) சண்முகம், சீர்காழி வருவாய் வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %