மயிலாடுதுறை அருகே பண்டாரவடை கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 38 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்துகிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த திருநங்கை யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் தண்டவாளத்தின் அருகே சென்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பண்டாரவடை கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் (வயது42) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த திருநங்கை யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எந்த ரெயிலில் அடிபட்டு இறந்தார் என விசாரணை நடத்தி வருகிறார்.