0 0
Read Time:2 Minute, 39 Second

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி கூழையார் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சவுக்கு மரக்காடு நிறைந்தபகுதிகளில் ஆமைகள் முட்டை இட்டு செல்வது வழக்கம்.

அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும். இவ்வகை ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும். ஆலிவ்ரெட்லி ஆமைகள் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும்.

இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்த பொறிப்பகத்தில் இருந்து உருவான ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று கூழையாறு கடற்பகுதியில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வனச்சரகர் டேனியல் ஆகியோர் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டனர். கடற்கரையில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள் மணற்பரப்பில் மெதுவாக ஊர்ந்து சென்று கடல் நீரை அடைந்து நீந்தி சென்றன.

இந்த ஆண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 32,000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 3-வது கட்டமாக முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்த 2,200 ஆமைகுஞ்சுகள் கடலில் விடப்பட்டது. இதுவரை 3 கட்டங்களாக 15,572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

நேற்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்துக்காக இதே கடற் பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %