கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் வகுப்பறைக்கு எக்காரணம் கொண்டும் மத ரீதியான விஷயங்களை அடையாளப்படுத்தும் விதமாக எந்த ஆடையும் இருக்கக் கூடாது பரிந்துரைக்கப்பட்ட சீருடைகள் மட்டுமே அணிய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கர்நாடகாவில் தொடங்கியது.
இதில் நேத்து கலபுரகி மற்றும் கதக் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவியை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் ஹிஜாபுடன் வகுப்பறைக்குள் அனுமதித்திருந்தனர்.
இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 7 ஆசிரியர்கள் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கலபூர்கி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் முகமது அலி என்பவர் ஹிஜாபுடன் மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்ததாக இந்து ஜகரன் வேதிகே அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். அதில் அந்த ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.