சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு லால்கான் பள்ளிவாசல் தலைமை இமாம் அபுதாஹிர் கிராஅத் ஓதினார், வழக்கறிஞர் பக்ருத்தீன் தொகுப்புரை வழங்கினார், மகபூப் உசைன் துவக்கவுரை நிகழ்த்தினார், சிதம்பரம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் செல்லப்பா என்கிற முஹம்மதுஜியாவுதீன் தலைமையுரை நிகழ்த்தினார், நகர் மன்ற உறுப்பினர் ஹஜ்முஹம்மது மக்கீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது அஸ்லம் ஹிஜாப் அணிவதற்க்கு தடை விதித்த கர்நாடக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர், ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லைமுபாரக்,மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன்ரஷீது,உமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்சாத்,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சனாவுல்லா,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி தேசிய மண்டல அமைப்பாளர் முகம்மதுபைஜான்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் நாகூர்மீரான், திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால. அறவாளி, பேராசிரியர் ரஷீத்ஜான், ஆகியோர் கலந்துகொண்டு ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் அவசியம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் 1000 க்க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிதம்பரம் வட்டார அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமாணோர் கலந்து கொண்டனர், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முஹம்மதுஹலீம் நன்றி கூறினார்.
நிருபர்:பாலாஜி