0 0
Read Time:5 Minute, 10 Second

நெல்லிக்குப்பம் நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைதலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல், மேலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கணேஷ் முருகன் தீர்மானம் வாசித்தார்.

கூட்டத்தில் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் குளம் தூர்வாருதல், நகராட்சி கழிவறை சரிசெய்தல், நுண் உயிர் உரம் தயாரிக்கும் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வேல்முருகன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதன்மை நகராட்சி

வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தவுடன், அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நெல்லிக்குப்பம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
இக்பால் (ம.ம.க.) – நெல்லிக்குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயபிரபா மணிவண்ணன் (தி.மு.க.) – சர்க்கரை ஆலையில் இருந்து வரக்கூடிய கரிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

முத்தமிழன் (சுயேச்சை) – குடிநீர் இணைப்பு இல்லாத ஒரு வீட்டு உரிமையாளர் கடந்த 19 ஆண்டுகளாக வரி செலுத்தி வந்தார். ஆனால் வரி கட்டவில்லை என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பின்தங்கிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பூபாலன் (தி.மு.க.)- 11-வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதுடன், புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.
செல்வகுமார் (அ.தி.மு.க.) – திருக்கண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா கஜேந்திரன்(தே.மு.தி.க.) -20-வது வார்டு பகுதியில் மின்விளக்கு உடனடியாக அமைத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மஞ்சுளா ராஜாராம் (சுயேச்சை ) -நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள குப்பைகளை 21-வது வார்டுகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலக்கியா சாமிநாதன்(தி.மு.க.) – நெல்லிக்குப்பம் போலீஸ் லைன் முதல் கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் எதிர்காலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஸ்வரி சீனுவாசன்(தி.மு.க.)- 16-வது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் நெல்லிக்குப்பம் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்வதால் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %