0 0
Read Time:1 Minute, 44 Second

பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் ஏராளமானோர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இந்நிலையில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன் பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதமும், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறி உள்ளது.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்தாண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %