விருத்தாசலம், வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தில் ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் அங்கக உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபகுமார், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பரமசிவம், விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண் வணிக வேளாண்மை அலுவலர் சரஸ்வதி, அட்மா திட்டக்குழு தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அங்கக உற்பத்தி, அங்கக முறை இடுபொருட்கள் உற்பத்தி பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் அங்கக விவசாயிகள் இளையராஜா, பழனி, எழில்வேந்தன், கணேசன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.